தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

சத்தி அருகே  500க்கும் மேற்பட்ட வாழைகளை துவம்சம்  செய்த யானைகள் 


சத்தி அருகே புளியம்கோம்பை பகுதியில் புகுந்த 3 யானைகள், 500 க்கும் மேற்பட்ட வாழைகளை நாசப்படுத்தி உள்ளன.

சத்தி வனச்சரகத்திற்குட்பட்ட புளியம்கோம்பை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதம் செய்கின்றன.

இந்நிலையில், வனத்தை விட்டு வெளியேறிய 3 யானைகள் வெங்கிடு மேஸ்திர தோட்டத்தில் புகுந்து  குலை தள்ளிய நிலையில் இருந்த  வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. யானைகளின் சப்தம் கேட்டு  அங்கு வந்த விவசாயிகள் யானைகளை பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்கள் காட்டியும் விரட்டினர்.  விடிய,விடிய நடந்த  போராட்டத்திற்கு பின் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. ஆனால் அவை சிறிதுதூரம் சென்றுவிட்டு மீண்டும் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. யானைகளின் அட்டகாசத்தால் 400க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

தினந்தோறும் இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும்  யானைகளை வனத்துறையினர் விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment