தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 22, 2014

புன்செய் புளியம்பட்டியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம்


புன்செய் புளியம்பட்டியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை  ஆதரித்து தீவிர இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம், இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் தொகுதி செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான எஸ்.ஆர். செல்வம் தலைமை தாங்கினார். பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வி.ஏ. பழனிசாமி, நகர செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், நகரமன்ற துணை தலைவர் டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.சின்னசாமி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் பூவை செழியன் கலந்து கொண்டு பேசும் போது கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதியும், ஸ்டாலின்னும் கஜானாவை காலி செய்ததுதான் அவர்கள் செய்த சாதனை. முதல்வர் ஜெயலலிதா அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் நமது முதல்வர். இவ்வாறு பல்வேறு நல திட்டங்கள் தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.

 பவானிசாகர் தொகுதி செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான எஸ்.ஆர். செல்வம் பேசும் போது பெண்களுக்கு திருமண நிதிஉதவி தொகை திட்டம், முதியோருக்கு உதவி தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் தந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கரத்தை வலுபடுத்த இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். 2 ஜி ஊழலில்  1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து திகார் சிறை சென்ற  ராசாவை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்றார்.


முன்னதாக நேரு நகரில் இருசக்கர வாகன பேரணியை  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேரணி, சுல்தான் ரோடு, மாதம்பாளையம் ரோடு, சௌடேஸ்வரி அம்மன் கோவில் வீதி, கோவை மெயின் ரோடு, டானாபுதூர் நால்ரோடு, காந்தி நகர், மாரியம்மன் கோவில் வீதி வழியாக சென்று எம்.ஜி.ஆர் சிலையை வந்து அடைந்தனர். இரு சக்கர வாகன பேரணியில் திரளான அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கு கொண்டனர்.

0 comments:

Post a Comment