தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 28, 2014

சத்தியமங்கலம் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்



16வது மக்களைத் தேர்தலையொட்டி வியாழக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் சத்தியமங்கலம் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

16வது மக்களவைத் தேர்தல்  நாடுமுழுவதும் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. 6வது கட்டத் தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மக்களவைக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவையில் உள்ள 263 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவிலிபாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. அதனைத் தொடர்ந்து, கிராமமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
 
 
சத்தி வட்டாரத்தில் பனையம்பள்ளி, சாணார்பதி, வாலிபாளையம், புங்கம்பள்ளி, குப்பந்துறை, பவானிசாகர் உள்ளிட்ட கிராமங்களில் கிராமமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குசாவடியில் காத்திருந்தனர். நண்பகல் 12 மணியளவில்
50 சதவீத மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.சத்தி ஜான் டி பிரிட்டோ பள்ளி வாக்குசாவடியில் வாக்காளர்கள் 1 மணி நேரம் காத்திருந்து வாக்குஅளித்தனர்.  பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் பனையம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியிலும் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் வாலிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிலும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் சத்தி ரமணி துவக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர். 

பெரும்பான்மையான வாக்குசாவடிகளில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் இளைஞர்கள் வரிசையாக நின்று தங்களது முதல் வாக்கினை பதிவு செய்தனர்.நடந்துசென்று வாக்களிக்க இயலாத  முதியோர்களை உறவினர்கள் தனி ஆட்டோவில் அழைத்துச் சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மலைப்பகுதி வாக்குசாவடிகளில் மலைவாழ்மக்கள் குடும்பம் சகிதமாக வந்து வாக்களித்தனர். அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பவானிசாகர் சட்டப்பேரவைக்குட்பட்ட வாக்குசாவடிகளில்  மாலை 3 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 வாக்குசாவடிகளில் துணை ராணுவப்படையினர், உள்ளூர் போலீஸார் மற்றும் காவல் இளைஞர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

0 comments:

Post a Comment