தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 12, 2014

திம்பம் மலைப்பகுதியில் திடீர் கோடை மழை




திம்பம் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை கோடைமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

சத்தியமங்கலம் பகுதியில் கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திம்பம் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென சூறாவளி காற்றுடன் கோடைமழை பெய்தது. சத்தியமங்கலம் திம்பம் மலைப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 1105 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் ஊட்டியில் உள்ள தட்பவெப்பநிலை இங்கு நிலவுகிறது.

நடப்பாண்டு பருவமழை பெய்யாமல் பொய்த்துவிட்டதாலும் கடும் வெயில் மற்றும் வறட்சியின் காரணமாக இப்பகுதியில் உள்ள  மரங்கள் காய்ந்து கருகியுள்ளன. இங்கு வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி அலைகின்றன. இதற்கிடையே வெள்ளிக்கிழமை 2 மணியளவில் திம்பம், காளிதிம்பம், பெஜலட்டி, ஆசனூர் மற்றும் அரேப்பாளையம் கிராமங்களில் கோடைமழை சுமார் 1 மணிநேரம் இடைவிடாமல் பெய்தது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரம் சாரல் மழை பெய்துகொண்டே இருநத்து.

மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில்லென்ற குளிர்ந்த காற்று வீசியது. தட்பவெப்பநிலை மாற்றம் ஏற்பட்டதால் சத்தி - மைசூர் சாலையில் செல்லும் பயணிகள் திம்பம் மலைப்பகுதியில் நின்று மழை மற்றும் குளிர்ந்த காற்றை அனுபவித்து சென்றனர். 

நீண்ட நாள்களாக மழையை காணாத மலைவாழ் மக்கள், காய்ந்து போன விளைநிலங்களில் மழை கொட்டியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment