தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 15, 2014

கோணமூலை ஊராட்சியில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வீடு வீடாக வாக்குசேகரிப்பு





கோணமூலை ஊராட்சியில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கட்சி நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் சத்தியமங்கலம் பஸ்நிலையம், மைசூர் டிரங் ரோடு, ரங்கசமுத்திரம், ராஜவீதி ஆகிய வீதிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். அதனைத் தொடர்ந்து, கோணமூலை ஊராட்சியில் நெசவாளர் காலனியில் வீடு வீடாக சென்று நெசவாளர்களிடம் வாக்குகேட்டார். அப்போது, அவர் பேசியது: கோணமூலை ஊராட்சியில ரூ.42 லட்சம் செவில் தார் சாலை அமைக்கும் பணி அதிமுக ஆட்சியில் தான் நடந்துள்ளது. 35க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு பசுமைவீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. விலையில்லாத மிக்ஸி, கிரைண்டர், குறைந்த விலையில் பாமாயில் பருப்பு வகையில் அதிமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள், சீருடை புத்தகைப்பை மற்றும் பேருந்து வசதி ஆகிய தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  மண்ணெண்ணை அளவு கிடைக்கவும் முல்லைபெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண்பதும் கச்சத்தீவு முடிவுக்கு கொண்டுவரவும் இலங்கையில் தமிழர் வாழ்வுரிமை மற்றும் கர்நாடக காவிரி நீர் பிரச்னை போன்ற பிரச்னைகளை தீர்வு காணவேண்டுமெனில் தேசிய அளவில் அதிமுக வலுபெற வேண்டும். அதிமுக மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தின் தேவைகளை நாம் முழுவதும் கேட்டு பெற இயலும் என்றார். 
 



 

இதில் மாவட்ட ஊராட்சித்தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஊராட்சி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மின்சண்முகம், கோணமூலை ஊராட்சி செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment