தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 29, 2014

அமோக விளைச்சல்: மல்லி விலை கிலோ ரூ.200 ஆக சரிவு





கோடை வெப்பம் காரணமாக மல்லிகை மகசூல் 20 டன்னாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கிலோ ரூ.200 ஆக சரிந்துவிட்டது.
   
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம்,கெஞ்சனூர், தொட்டம்பாளையம்,வடவள்ளி, கொத்தமங்கலம்,பட்டரமங்கலம், குய்யனூர், கணுவக்கரை, காரணூர், இரும்பொறை மற்றும் செங்கம்பள்ளி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை,கனகாம்பரம்,சம்பங்கி, செவ்ந்தி,பட்டுப்பூ, செண்டுமல்லி மற்றும் ஜாதிமுல்லை உட்பட பல்வேறு வகையான பூக்கள் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 20 லட்சம் மல்லி,முல்லைப்பூ நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மாதங்களில் பூக்களின் உற்பத்தி ஒரு டன்னாகவும் பிற மாதங்களில் அதிகபட்சமாக 20 டன்னாகவும் இருக்கும். வறட்சியை தாக்கும் பூக்கள் சாகுபடியால் ஆயிரக்கணக்கான கிராமப்புற பெண்கள்  வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தற்போது, கோடை வெயிலில் பூக்கள் உற்பத்தி நாள்தோறும் 20 டன்னை தாண்டுவதால் மல்லிகை விலை ரூ.200 ஆக சரிந்துவிட்டது. சத்தியில் செயல்படும் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட பூக்கள் விலை விபரம்: மல்லி கிலோ ரூ.200, முல்லை கிலோ ரூ.350 மற்றும் கனகாம்பரம் ரூ.500

பிப்ரவரி மாதத்தில் மல்லிகை உற்பத்தி 1 டன்னாக இருந்ததால் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. தற்போது, அதன் உற்பத்தி 20 டன்னாக அதிகரித்துள்ளதால் மல்லி கிலோ ரூ.200 ஆக சரிந்துவிட்டது. கேரளாவில் திருவிழா நடைபெறுவதால் கனகாம்பரத்தின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தியில் கொள்முதல் செய்யப்பட்ட பூக்கள் மைசூர், பெங்களூரு,  பாலக்காடு, கோவை போன்ற நகரங்களுக்கு வேன், கார், பிக்-அப் வேன் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. திருவணந்தபுரம், கொச்சி, ஐதராபாத், மும்பை மற்றும் சார்ஜா போன்ற அரபு நாடுகளுக்கு விமானம் மூலம் பூக்கள் அனுப்பப்படுகின்றன.

0 comments:

Post a Comment