தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 12, 2014

கோடை விடுமுறை: பவானிசாகரில் குவிந்த சுற்றுலா பயணிகள்



பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையின் அழகை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வரத்துவங்கியள்ளனர்.


தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது பவானிசாகர் அணை. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் பவானிசாகர் அணை கட்டும்போது முன்னாள் பிரதமர் மறைந்த நேரு, தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் ஆகியோர் இதன் கட்டுமான பணியை பார்வையிட்டுள்ளனர்.


சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணைக்கு முன்புறம் உள்ள அணைப்பூங்காவில் சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்குமேடை, செயற்கை நீரூற்றுகள் மற்றும் படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விடுமுறை என்பதால் நாள்தோறும் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வார இறுதிநாள்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தைவிட கூடுதல் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்த பூங்கா செயற்கை நீரூற்றுகள் தற்போது பழுது நீக்கி, பயணிகள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்யப்பட்டு வியாழக்கிழமை முதல் செயல்பட துவங்கின. பூங்கா நுழைவுக்கட்டணமாக ரூ.4-ம், படகில் சவாரி செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பண்ணாரிஅம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பவானிசாகர் அணைக்கு வருகின்றனர். பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சாலையோர மீன்கடைகளில் மீன்ரோஸ்ட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

0 comments:

Post a Comment