தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 12, 2014

சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா 
 
நிகழ்ச்சியில் எஸ்கேஜி குழந்தைக்கு பட்டம் வழங்கி கெளரவிக்கிறார் பிஎஸ்என்எல் முதன்மை மேலாளர் பு.ஜெயந்தி மாலா. உடன்,கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சு.ராஜசேகரன் பள்ளி தாளாளர் கே.என்.சந்திரசேகரன்,முதல்வர் சு.துரைசாமி, துணை முதல்வர் எஸ்.ஜே.ஹரிராம் சந்தர் உள்ளிட்டோர்


சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
 எல்கேஜி குழந்தைகளுக்கான விழாவில் 90 குழந்தைகளுக்கு எஸ்கேஜி பட்டங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் முதன்மை மேலாளர்  பு.ஜெயந்தி மாலா குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். அப்போது அவர் பேசுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே உயர்ந்த  குறிக்கோளுடன் வளர ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் விரும்பமான பாடங்களை கற்றுத் தரவேண்டும். இந்தியாவின் எதிர்கால இளைஞர்கள் என்பதை எடுத்துக்கூறி தேசப்பற்றுள்ள மாணவர்களாக மாற்ற வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சு.ராஜசேகரன் கலந்துகொண்டு பேசும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்வழியில் செயல்படுத்த வேண்டும் மற்றும் அவர்களை எவ்வாறு கல்வியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறினார். 

இதில் பள்ளி தாளாளர் கே.என்.சந்திரசேகரன்,பள்ளி முதல்வர் சு.துரைசாமி, துணை முதல்வர் எஸ்.ஜே.ஹரிராம் சந்தர், மழலையர் பிரிவு கவுன்சிலர்  P.சிந்து ஆகியோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

0 comments:

Post a Comment