தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 15, 2014

காட்டு பண்ணாரி பேளாரி அம்மன் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள்
 



தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு காட்டுபண்ணாரி பேளாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன.இக்கோவிலுக்கு செல்ல வாகனவசதி இல்லாததால் பக்தர்கள் நடைபயணமாக சென்று வழிபட்டனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதி பண்ணாரி அடிவாரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது காட்டுபண்ணாரி  பேளாரி அம்மன் கோவில்.  இக்கோவிலில் அமாவாசை, பெளர்ணமி நாள்களில் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெறும். இதில் மலைவாழ் மக்கள் அதிகளவில் பங்கேற்பர்.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி, கோவிலில் மூலசங்கரய்யன், பேளாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் பரம்பரை உரிமைதாரர்களான  பழங்குடியினரை தவிர பிறபகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்குவதில்லை.

இருப்பினும்,வெளிப்பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் கோவிலுக்கு செல்லும் நுழைவாயிலில் வனத்துறையினர் தடுப்புசங்கிலி அமைத்து தடுத்துள்ளனர்.திம்பம் மலையடிவாரத்தில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் புலிகள் காப்பக எல்லைக்குள் அமைந்திருப்பதால் மக்கள் ஒன்றாக கூடி திருவிழா நடத்த புலிகள் காப்பகம் அனுமதி வழங்குவதில்லை. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நடைபயணமாக சென்று அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.

0 comments:

Post a Comment