தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 17, 2014

5வது கட்ட தேர்தல்: 12 மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு!



பெங்களூரு/புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான 5வது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும், மாலை 4 மணி அளவில் 72 சதவீதம் வரை வாக்குப் பதிவாகி இருந்தது.
 ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு  3 மணி வரை 40 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் 19 தொகுதிகளிலும், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 11 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒடிசாவில் 3 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

மத்திய பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 52 சதவீத வாக்குகளும், பீகாரில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்  மாலை 4 மணி வரை சராசரியாக தலா 47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது.

நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த ஜார்கண்டில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மணிப்பூரில் 2 மணி வரை 62 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில்,  மதியம் 12 மணி வரை 26 சதவீதமும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment