தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 30, 2014

சத்தி புலிகள் காப்பகத்தில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரிப்பு

5 குட்டிகளுடன் தாய்புலி உலா



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெண்புலி தனது 5 குட்டிகளுடன் உலா வரும் காட்சி வனத்துறையினரின் தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் சத்தி புலிகள் காப்பகத்தில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய சத்தியமங்கலம் வன உயிரினச்சரணாலயம் நான்காவது புலிகள் காப்பகமாகும். இது  2013 ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்தியாவின் 42வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புலிகள் காப்பக கள இயக்குநர் இ.அன்வர்தீன், துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:


சத்தி புலிகள் காப்பகம் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை உள்ளடக்கிய பல்லுயிர் பெருக்கம் கொண்ட வாழ்விடமாகவும் பல்வேறு வன உயிரினங்களை கொண்டதாகவும் உள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி யானைகள், சிறுத்தை புலிகள், கரடிகள், காட்டுமாடுகள், கழுதைப்புலிகள், வெளிமான்கள், நான்கு கிளை கொம்பு மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுடன் பறவை, ஊர்வன உயிரினங்களும் வாழ்கின்றன.
புலிகள் மற்றும் புலிகளுக்கு இரையாகும் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுக்க தமிழக வனத்துறை,உலக வனஉயிரின காப்பகம் என்ற  தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேரமா வைத்து கண்காணிக்கப்பட்டது,தானியங்கி கேமராவில் பதிவான புலிகள் நடமாட்டம் குறித்த காட்சிகளின் படி இங்கு புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு வனத்துறையினர்  மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணமாகும்.

இதனைத் தொடர்ந்து, 150 மலைவாழ் மக்களை உள்ளடக்கிய வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகப்  பகுதியில் பாதுகாப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் நீராதாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது. புலிகள் காப்பகத்தில் பல்வேறு சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் செயல்படுத்த உள்ளதால் மலைவாழ்மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது புலிகள் மற்றும் மனிதர்களை தன்னகத்தே கொண்டு வாழ்விடமாக அமைந்துள்ளதே இதன் சிறப்பாகும். இந்த வனப்பகுதிக்குள் 9 பழங்குடியின குக்கிராமங்களும் 18 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. தானியங்கி கேமரா மூலம் தற்போது கிடைத்துள்ள புலிகள் நடமாட்ட காட்சி மூலம் கட்டுப்பாட்டுடன் பாதுகாக்கப்பட்டு புலிகள் காப்பகத்தில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் மேலும் ஒத்துழைத்தால் இங்குள்ள புலிகள் வாழ்வாதாரம் பற்றி உலகளவில் பேசப்படும் என்றனர்.

0 comments:

Post a Comment