தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 4, 2014

பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படும் பவானிசாகர் அணை பூங்கா: முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்

 
 





சத்தியமங்கலம்,
குப்பைகள், பிளாஷ்டிக் பொருள்கள் நிறைந்து காணப்படும் பவானிசாகர் அணை பூங்காவில் பராமரிப்பு இல்லாததால் அணைப்பூங்கா களையிழந்து காணப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அணைகளில் மண்அணை என்ற பெருமை பவானிசாகர் அணைக்கு உண்டு. ஆடிப் பண்டிகையை கொண்டாட பவானிசாகர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி 18ம் தேதி மட்டுமே அணையில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட இந்த சிறப்பு அனுமதி உள்ளதால் ஈரோடு, கோவை,திருப்பூர் ஆகிய மாவடங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அணைக்கு வந்து செல்வார்.     

இந்தாண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பண்டிகை கொண்டாடப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அணை பூங்காவை சுற்றிப்பார்க்க ஆர்வத்துடன் குடும்பம் சகிதமாக வந்தனர். அணை பூங்காவில் உள்ள நீரூற்று வறண்டு காணப்பட்டதுடன் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மதுபாட்டில், பிளாஷ்டிக் பொருள்கள் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தனர். பூங்கா பகுதியில் பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்பட்டதால் அணைப்பூங்காவில் பயணிகள் கூட்டம் குறைந்தது. பெரும்பாலான மக்கள் ஆர்வமின்மையால் வெறுப்புடன் சென்றனர்.

அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டபோதிலும் அணைப்பகுதி சாலையில் நூற்றுக்கணக்கான சுகாதாரமற்ற தாற்காலிக கடைகள் ஆக்கிரமித்துள்ளன. மீன்வறுவல், சாப்பாடு, சோளக்கதிர், ஐஸ் கடைகளில் விற்பனை ஜோராக நடந்தது. நீர்த்தேக்கப்பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் வியாபாரிகள் அங்குள்ள விறகுகளை சேகரித்து அதே இடத்தில் சமையல் செய்தனர். ஆபத்தை உணராமல் திடீரென முளைத்துள்ள சமையல் கூடங்கள், தாற்காலிக கடைகளில் வசூல் வேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியோடு நடந்துள்ளது என கம்யூ கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

மேலும் பவானிசாகர் அணைக்கு அருகில் உள்ள மதுப்பானக்கடைகளில் இளைஞர் கூட்டம் அலைமோதியது. மதுப்பானங்களை வாங்கிக்கொண்டு இளைஞர் பூங்காவில் மது அருந்தியதால் தூரி ஆடும் பகுதியில் பெண்கள் அருவருப்புடன் நடந்து சென்றனர். சுற்றுலா  பயணிகளுக்கு போதிய ஏற்பாடுகள் செய்து தரப்படாததால் ஆடிப்பண்டிகை நாளன்று பவானிசாகர் அணைப்பூங்கா பொலிவிழந்து காணப்பட்டது.

0 comments:

Post a Comment