தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 10, 2014

சிறுத்தைகளிடமிருந்து தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தி திரியும் கிராம மக்கள்



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிகம் சிறுத்தைகள், புலிகள் வசித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 10–ந்தேதி திம்பம் மலைப்பாதை 27–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தாளவாடி வேன் டிரைவர் முகமது இலியாஸ் என்பவரை சிறுத்தை கொன்று தின்றது. இலியாசின் கழுத்து பகுதியில் கவ்வி பிடித்த சிறுத்தை கழுத்தை கடித்து ரத்தம் குடித்தது. பின்னர் இதய பகுதியை தின்றுவிட்டது.

இந்த திகில் சம்பவம் மலைப்பகுதியில் வாகனங்களில் செல்வோரையும், வனக்கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியது. இதில் இருந்து மீள்வதற்கு முன்பாக கடந்த 17–ந்தேதி வனக்காவலர் கிருஷ்ணன் என்பவரை திம்பம் சோதனைச்சாவடி அருகில் வைத்து சிறுத்தை அடித்து கொன்று தின்றது.

இதையடுத்து ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க திம்பம் மலைப்பகுதியில் 4 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இதையடுத்து அந்த சிறுத்தை சிக்கியது. அதனை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

பிடிபட்ட சிறுத்தை இலியாஸ், கிருஷ்ணன் ஆகியோரை தீர்த்து கட்டிய சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

அந்த சிறுத்தையை பிடிப்பதற்கு முன்பாக அந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கேமிராக்கள் மூலம் கண்காணித்ததால் உறுதி செய்ய முடிந்ததாக சத்தியமங்கலம் வன அதிகாரி ராஜ்குமார் தொவித்தார்.

ஆட்கொல்லி சிறுத்தையை பிடித்து விட்டதால் வனகிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அது நீடிக்கவில்லை.

நேற்று முன்தினம் திம்பம் காளிதிம்பம் வனக்கிராமத்தை சேர்ந்த ரேசன்(வயது 42) என்பதை சிறுத்தை தாக்கி கொன்றுவிட்டது. காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டினை தேடி சென்றபோது ரேசனுக்கு இந்த கதி நேர்ந்தது. இதுவும் சிறுத்தைதான் என்பதை வனத்துறையினர் உறுதி படுத்தினர்.

மீண்டும் ஆட்கொல்லி சிறுத்தை திம்பம் பகுதியில் நடமாடுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து காளிதிம்பம் வனக்கிராம வாசிகள் கையில் ஆயுதம் ஏந்தி நடமாட தொடங்கியுள்ளனர். திம்பம்–தலமலை செல்லும் வழியில் காளிதிம்பம் கிராமம் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து இந்த கிராமத்திற்கு 3 கி.மீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது. எனவே இந்த பகுதி மக்கள் அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர்.

ஆட்கொல்லி சிறுத்தை பற்றி வன அதிகாரி ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

இலியாஸ், கிருஷ்ணன் ஆகியோரை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து விட்டோம். ஆனால் இப்போது ரேசனை கொன்ற சிறுத்தை மனித உண்ணியோ, ஆட்கொல்லியோ கிடையாது. ரேசனின் உடலின் எந்த பாகத்தையும் அது சாப்பிட வில்லை. சிறுத்தை இருக்கும் பகுதிக்கு சென்றதால் இந்த விபத்து நடந்துள்ளது.

இருப்பினும் அந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க காளிதிம்பம் பகுதியில் 20 கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. நேற்று சில இடங்களில் கேமிராக்கள் பொருத்தியுள்ளோம். இன்றும் கேமிராக்கள் பொருத்தப்படும். தினமும் காலையில் கேமிராக்களில் பதிவான தகவல்கள் சேகரிக்கப்படும். ஆட்கொல்லி சிறுத்தையாக இருந்தால் நிச்சயம் கூண்டு வைத்து பிடிக்கப்படும்.

இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

0 comments:

Post a Comment