தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 13, 2014

தமிழகத்தின் மத ஒற்றுமை, பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கவேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்




ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழகத்தின் மத ஒற்றுமை, பண்பாடு, பாரிம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று வாழும் கலை குடும்பத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

வாழும் கலை குடும்பத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பவானி, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வருகை தந்தார். அங்கு, சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்ட அவர் கூறியது:

தமிழகத்தில் தற்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு செல்வதை தடுக்கவேண்டும். இது, நாட்டுக்கே பேராபத்தாக முடியும்.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடையே மத ஒற்றுமையும், சேர்ந்து வாழும் பண்பாடும் உள்ளது. எனவே, மக்களிடையே வன்முறையை தவிர்க்கவேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மதுவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கிராமங்களிலும் பெண்களுக்கு அதிக துன்பம் ஏற்பட்டு வருகிறது.

உலகில் மழை பெய்ய மரங்கள், செடிகளை அதிகளவில் நடுவது அவசியம். இதற்கான புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் மரங்கள் வளர்க்க ஆர்வம் காட்டவேண்டும். பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை. தற்போது ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

பவானி, கூடுதுறையில் நதிகளைப் பாதுகாக்க வேண்டி காவிரித் தாய்க்கு தீபாராதனை காட்டியும், பூக்களைத் தூவியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், விழாக் குழுத் தலைவர் ஜேகேகே.முனிராஜா, வாழும் கலை ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் பி.முரளிதரன், ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணன் (பவானி), டிஸ்கோ சம்பத் (குமாரபாளையம்), தொழிலதிபர் அக்னி எஸ்.ராஜா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பவானி லட்சுமி நகர் பைபாஸ் சாலையில் ஆடிட்டர் முரளிதரன் இல்லத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment