தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 7, 2014

கிராமப்புற மாணவர்களுக்கு இலவச மாலைநேர வகுப்புகள்.ட்ரீ அறக்கட்டளை நடத்துகிறது.

 
 
புஞ்சைபுளியம்பட்டி;ஆகஸ்ட் 8;
புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு இலவச (டியூசன்)  மாலைநேர வகுப்புகளை,தன்னார்வலர்கள் மூலம்,ட்ரீ அறக்கட்டளை நடத்துகிறது. 

ஈரோடு மாவட்டம்,புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ளது,நல்லூர் கிராமம்.இக்கிராமத்தில்,சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இவர்களில்,பெரும்பாலோனோர் கூலி வேலைக்கும்,விவசாய தொழிலுக்கும், செல்பவர்களாக உள்ளனர்.போதிய  வருமானம் இல்லாத நிலையில்,பெற்றோர்கள்,தங்கள் குழந்தைகளை டியூசன் வகுப்புகளுக்கு,அனுப்ப முடியாத நிலையில் இருந்தனர். இதனை அறிந்த, புஞ்சைபுளியம்பட்டி ட்ரீ அறக்கட்டளையினர், மாணவ-மாணவிகளுக்கு உதவ முன் வந்தனர். 
அதன்படி,கிராமப்புற மாணவர்களுக்கு இலவச மாலைநேர டியூசன் வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான நிகழ்ச்சி,நல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.முன்னாள் ராணுவ வீரர் என்.ஆர்.ராமசாமி,ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுபற்றி ட்ரீ அறக்கட்டளை தலைவர்ஆர்.சீனிவாசன் கூறும்போது;
வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகின்றன. மேலும் நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல் மற்றும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்க பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பட்டதாரி தன்னார்வலர்கள் மூலம் நடத்தபடுகின்றன.தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  60 மாணவ மாணவியர்கள் இலவச டியூஷன் வகுப்புகள் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். வரும் கல்வியாண்டில் மேலும் அதிக மாணவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்கிறோம். மேலும் வாரம் ஒருமுறை ஓவிய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் தங்கள் கல்வியை மென்மேலும் மேம்படுத்தி கொள்ள முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் கிருஷ்ணவேணி, ஐஸ்வர்யா, லட்சுமி, மோகனபிரியா, தங்கமணி, லதா மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

0 comments:

Post a Comment