தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 11, 2014

குடும்ப உறவுகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - நடிகர் சிவகுமார்

 




ஒவ்வொரு மனிதரும் குடும்ப உறவுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகர் சிவகுமார் கூறினார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சிந்தனை அரங்கில் "வாழ்க்கை ஒரு வானவில்' என்ற தலைப்பில் அவர் பேசியது:

குழந்தைகளை சிறுவயதிலேயே பள்ளிகளில் உள்ள விடுதிகளில் சேர்க்கும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். 5 முதல் 12 வயது வரையில்தான் குடும்ப உறவுகள், குடும்ப பாரம்பரியம் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும். விடுதியில் சேர்த்தால், இதுபோன்ற விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகிவிடும்.

வளர்இளம் பருவத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். இந்த வயதில் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு நண்பர்களாக மாறி, அப்போது ஏற்படும் சந்தேகங்களை புரிய வைக்க வேண்டும். நிறம், குடும்பப் பின்னணி பற்றி வெறுப்புகள் கூட ஏற்படும். அப்போது எவ்வித பின்புலமும், அழகும் இல்லாமல் வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய தலைவர்கள் பற்றி கற்றுக்கொடுத்து, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதுபோல வகுப்பறைகளில் குழந்தைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து, அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தக் கூட்டத்தில் எனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் எனது ஆசிரியர் குமாரசாமி, எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தியதால்தான் நடிகராக மாற முடிந்தது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கு குடும்ப உறவுகள் பற்றி தெரியவதில்லை. திருமணம் செய்யாமல் வாழ்க்கையை கழித்துவிடலாம் என எண்ணுகின்றனர். இதுபோன்ற தவறான எண்ணம் கொண்டவர்கள், இப்போது 5 சதவீதம் பேர் உள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் முழுமையாக புரிந்துகொண்டு வாழ வேண்டும். குழந்தைகள் பிறந்துவிட்டால், மணமுறிவு என்ற பேச்சுக்கே இடமளித்துவிடக் கூடாது. குடும்ப உறவுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.ஓய்வுபெற்ற பின்னர் தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் உழைத்த மனைவியை முழுமையாக மதிக்க வயதானவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது கூட அதில் தலையிட்டு பழமையான பெயர்களை வைக்கக் கூடாது.

விடலை பருவத்தினர் காதல் செய்தால், பெற்றோர் கண்டிக்க வேண்டும். நன்கு படித்து வேலைக்கு வந்தபின்னர் தொடர்ந்து 5 ஆண்டுகள் காதல் செய்தால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முன்வர வேண்டும். வாழ்க்கையை முழுமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்தார். இந் நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினார்.

0 comments:

Post a Comment