தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 23, 2014

பவானிசாகர் வனபகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி








பவானிசாகர் வனபகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள பவானிசாகர் அடர்ந்த வனத்தின் உள்ளே  பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளது. சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு மொத்தம் 90 மாணவ மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் 40 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அடர்ந்த வனத்தின் உள்ளே அமைந்துள்ள வால்கரடு மற்றும் பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான கண்ராயண் மொக்கை ஆகிய இடங்களில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் நடந்தும், பரிசல் மூலமாகவும் சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயின்று வருகிறார்கள். சரியான வாகன வசதி இல்லாத காரணத்தால் மாணவ மாணவியர்களின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் நீண்ட தூரம் நடந்து வருவதால் மாணவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். மழை காலங்களில் பரிசல்களை இயக்க முடியாததால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியவில்லை. மேலும் அடிக்கடி யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் நடமாட்டம் காரணமாக மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச வாகன வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. இதற்கான தொடக்க விழாவில் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் கலந்து கொண்டு இலவச போக்குவரத்து வசதியை துவக்கி வைத்தார். பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம், உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிளாரன்ஸ் செல்வகனி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் ரமாதேவி கூறியதாவது, அடர்ந்த வனம், காட்டு விலங்குகள், போதிய வாகன வசதி இல்லாத காரணத்தால் இதுவரை மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். தற்போது இலவச வாகன வசதி மூலம் மாணவ மாணவியர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களின் கற்றல் திறனும், வருகை பதிவும் நிச்சியம் உயரும். அடுத்த கல்வி ஆண்டில் மேலும் புதிய மாணவ மாணவியர்கள் சேர்கை அதிகரிக்கும். இந்த இலவச வாகன வசதி பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

0 comments:

Post a Comment