தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 30, 2014

இலக்கியம் படிக்கும் குழந்தை வாழ்வியலைக் கற்றுக்கொள்ளும் - திரைப்பட இயக்குநர் மிஷ்கின்

 



குழந்தைகள் இலக்கியத்தை கற்றுக்கொள்வதால் வாழ்வியலைக்கற்று பக்குவம் பெறும் என்றார் திரைப்பட இயக்குநர் மிஷ்கின்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியது:

நான் புத்தகங்களைப் படித்த நேரங்கள் தான் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ள நேரமாக இருந்தன. எனது பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்த பழக்கம் இது. நூற்றுக்கணக்கான கதைகளை எனக்குள் புகுத்தியது பாட்டிதான். அதிலிருந்துதான் எனது புத்தகம் வாசிக்கும் பழக்கம் துவங்கியது.

எனது வாழ்க்கையில் 72க்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் சலிப்பு ஏற்பட்டது. கடைசியாக வெள்ளைச்சுவர் வடிவத்தில் சினிமாத்துறை என்னை அழைத்தது. எல்லோரும் ஏதாவது ஒரு நேரத்தில் கதைகளைச் சொல்கிறோம். சினிமா பிரேம்களில் வரும் கற்பனை

மனிதர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை நான் கதை சொல்லும் களமாக்கிக்கொண்டேன். அதிலும் எனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

அப்போதும், எனக்கு ஆறுதலைத் தந்தது புத்தகங்களே. எந்த ஒரு கவலையாக இருந்தாலும் அதை புத்தகங்கள் மறக்கச்செய்துவிடும்.

புத்தகங்களைப்படிப்பது ஒரு தவநிலை. அதை நான் செல்லும் வழியெங்கும் செய்துகொண்டிருக்கிறேன். மனிதகுலத்தின் அனுபவ தொகுப்பாக இருக்கும் புத்தகங்களை படிப்பதை விட வேறு எதுவும் நமக்குப் பயன்தராது. குழந்தைகள் படித்து முதலிடத்தில் வரவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. குழந்தை பாஸ் செய்தால் போதும். அதுவும் சமூகத்துக்காகவே தேவைப்படுகிறது. எனது மகளுக்கு டால்ஸ்டாய் புத்தகங்களை படிக்க கொடுக்கிறேன். அவளும் கதை சொல்கிறாள். குழந்தைகள் இலக்கியம் படிக்கும் போது தான் வாழ்வியலை கற்றுக்கொள்ளும். எதிர்காலத்தில் அச்சமின்றி வாழும் பக்குவம் பெற்றுவிடும். இல்லையென்றால் எதிர்காலத்தில் திருமணம் செய்து போராட வேண்டிவரும்.

புத்தகம் படிக்கும் போது நான் ஆன்மாவுக்குள் பயணிப்பதாக உணர்கிறேன். எனக்கு சொந்த வீடு கிடையாது. ஆனால் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வைத்திருக்கிறேன். புத்தகங்கள் தான் உண்மையான முதலீடாகும். வேறு எதில் முதலீடு செய்தாலும் அது நிரந்தரமல்ல. இளைஞர்களே எதிர்கால சமுதாயம் என்பதும் சரியாகாது.

நமது குழந்தைகள் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அவற்றுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிப்பதை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் வாழ்வு வளமாக அமையும் என்றார்.

0 comments:

Post a Comment