தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 9, 2014

திம்பம் சீவக்காய்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர் மீது பாய்ந்த சிறுத்தை 



திம்பம் சீவக்காய்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகளை துரத்திய வந்த சிறுத்தைக்கு குரங்குகள் சிக்காமல் மரத்தில் ஏறி தப்பிச்சென்றதால் ஆத்திரமடைந்த சிறுத்தை, அங்கு நின்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநர் மீது பாய்ந்தது. அப்போது,அவர் சமயோசிதமாக அதனிடமிருந்து தப்பினார்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கணிசமான புலிகள், சிறுத்தைகள் உள்ளன.கர்நாடகம் மாநிலம் ரெய்சசூரில் அரிசி பாரத்தை இறக்கிவிட்டு சத்தியமங்கலம் வழியாக கொல்லம் நோக்கி லாரி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது.லாரியை சத்தியமங்கலம் வரதம்பாளையத்தை சேர்ந்த ஆர்.முத்துசாமி ஓட்டினார்.கிளீனர் சதீஸ் உடன் வந்தார்.

திம்பம் மலைப்பாதை சீவக்காய்பள்ளம் என்ற இடத்தில் லாரி எதிர்பாராமல் நின்றுவிட்டது. லாரியை சோதனையிட்டபோது டேங்கில் டீசல் இல்லாமல் நின்றது தெரியவந்தது. இதையடுத்து,டீசல் வாங்குவதற்காக அவ்வழியாக வந்த வேன் ஒன்றில் கிளீனர் சதீஸ் ஏற்றிவிடப்பட்டார். ஓட்டுநர் முத்துச்சாமி லாரியில் உள்ள பிறபாகங்களை ஆய்வுசெய்து கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் ச்ப்தம்போட்டபடி  ஓடிவருவதை பார்த்தபோது  குரங்குகளை சிறுத்தை துரத்துவதை  கண்டு திடுக்கிட்டார்.

இந்த போராட்டத்தில், குரங்குகள் மின்னல் வேகத்தில் மரத்தில் ஏறி தப்பியோடின. ஏமாற்றம் அடைந்த சிறுத்தை, எதிரே  இருந்த  ஓட்டுநரை பார்த்துவிட்டது. ஓட்டுநரும் சிறுத்தை தாக்க வருவதை நொடிப்பொழுதில் புரிந்துகொண்டார்.  சிறுத்தை ஆக்ரோஷமாக அவரை தாக்க பாய்ந்து வந்தபோது அவர் சமயோசிதமாக லாரியில் ஏறிக் கொண்டார்.ஆனால் சிறுத்தை அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றுகொண்டிருந்தது. 

அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை நடுரோட்டில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஆசனூர் வனச்சரக அலுவலர் எஸ்.சண்முகம் மற்றும் வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்தனர்.இதற்கிடையே,20-க்கும் மேற்பட்ட லாரி,பேருந்து ஓட்டுநர்கள் அங்கு திரண்டனர்.வனத்துறையினர், போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகள் என 50க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை காட்டுக்குள் விரட்டினர்.

சிறுத்தை தாக்க வந்த சம்பவத்தால் ஓட்டுநர் முத்துச்சாமி விரக்தியடைந்தார்.லாரியை வேறொரு ஓட்டுநர் ஓட்டிவந்தார். சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், திம்பம் வனத்தில் சிறுத்தை நடமாடுவது இயல்பானது. அது இரையைத் தேடி செல்லும்போது சாலையின் குறுக்கே அடிக்கடி தென்படுவதும் அதனை வாகன ஓட்டிகள் பார்ப்பதும் சாதாரண நிகழ்வுகள்.வாகன ஓட்டிகள் சாலையில் நிற்பதை தவிர்கக வேண்டும்.வனவிலங்குகள் வழித்தடத்தில் பொதுமக்கள் நிற்பதால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றார்.

0 comments:

Post a Comment