தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 7, 2014

பவானிசாகர் அருகே, ஒற்றை யானை அட்டகாசம்.
100-க்கும் மேற்பட்ட வாழை சேதம்.


புஞ்சைபுளியம்பட்டி;ஆகஸ்ட்;8;

பவானிசாகர் அருகே,நால்ரோடு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. 

 பவானிசாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனப் பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டுள் விவசாய பொருள்களை சேதப்படுத்தி வருகின்றன.
 இதைத் தடுக்கும் விதமாக, யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க வனத் துறையினர் அகழி வெட்டியுள்ளனர். சில இடங்களில் பாறைகள் உள்ளதால்நேற்று முன்தினம், அதிகாலை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானை நால்ரோடு பகுதியை ஒட்டியுள்ள ராஜேந்திரன் (54) என்பவரது தோட்டத்தில் புகுந்து, குலை தள்ளிய நிலையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. மேலும், தோட்டத்தில் உள்ள தண்ணீர் குழாய்களை உடைத்தும் நாசப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்து பவானிசாகர் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் காட்டியும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
 இருப்பினும், அந்த யானை அதே இடத்தில் நின்றுகொண்டிருந்ததால் வனத் துறையினர், காவல் துறையினரின் உதவியுடன் யானையை காட்டுக்குள் விரட்டினர்.

 தொடர்ந்து சேதம் ஏற்படுத்தி வரும் யானையை மயக்க ஊசி போட்டு வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாறைகள் உள்ள இடத்தில் வெடிவைத்து தகர்த்து, அகழி வெட்டி, யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment