தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 31, 2014

அட்ரஸ் இல்லாமல் போனது விஜய்காந்த் கட்சி: அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம்


சத்தியமங்கலம்,ஆக 31:
மக்களவைத் தேர்தலில்  விஜயகாந்தை மக்கள் புறக்கணித்துவிட்டதால் தேமுகவுக்கு முகவரி இல்லாமல் போய்விட்டது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தார்.


நீலகிரி மக்களைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதையடுத்து,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், உக்கரம், பெரியூர், கொத்துக்காடு, சதுமுகை, கேஎன்.பாளையம், கெஞ்சனூர், சிக்கரம்சபாளையம் ஆகிய பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சதுமுகையில் திரண்டிருந்த நெசவாளர்கள் மத்தியில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசியது:
அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பெற்று தந்த இந்த சதுமுகையில் அதிகமாக நெசவாளர்கள் வசிக்கின்றனர். நெசவாளர் பசுமை வீடுகள், மின் ராட்டை,  முதியோர் உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் தந்து நெசவாளர்களின் நலனின் அதிமுக அதிக அக்கறை காட்டி வருகிறது. நெசவாளர்கள் கோரிக்கைகள் எதுவாயினும் அவற்றை 30 நாள்களில் நிறைவேற்றித் தரப்படும். தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படி நிறைவேற்றி வருகிறோம். சத்தியில் விரைவில் அம்மா உணவகம் திறக்கப்பட உள்ளது. அதிமுக பொறுப்பேற்கும் போது கடுமையான மின்பற்றாக்குறை நிலவியது.

தெளிவான சிந்தனை, திறமையான நிர்வாகத்தால் மின்மிகை மாநிலமாக மாறி வருகிறது. வறட்சியில் கூட குடிநீர் பிரச்னையை தீர்வு கண்டார். கிராமந்தோறும் மண்சாலை எல்லாம் தார்சாலையாக உருவக்கெடுகிறது. சத்தியில் நகர்ப்புற அரசுமருந்துவமனை, போக்குவரத்து காவல்நிலையம், ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, அம்மா உணவகம் போன்ற அதிமுக சாதனைகள், மக்களவைத் தேர்தலில் காங். கட்சிக்கு லென்ஸ வைத்து பார்ககும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேமுதிக கட்சிக்கு முகவரியே போய் விட்டது. திமுகவுக்கு கிடைத்த முட்டையால் ஆம்லெட் கூட போட முடியாது. அதிமுக தொண்டர்கள் உழைப்பால் எதிர்கட்சியே இல்லாமல் போய்விட்டது என்றார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர்(வடக்கு) சி.என்.மாரப்பன், கேஎன் பாளையம் பேரூராட்சி அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.சின்னச்சாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment