தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 30, 2014

கணினி யுகத்திலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை - நல்லி குப்புசாமி செட்டி

 
 
கணினி பயன்பாடு அதிகரித்து வந்த போதும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை. நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது என தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

கிராமத்தில் பிறந்து படித்து நல்ல நிலைக்கு உயர்ந்த பலரும் தங்களின் அனுபவங்களை சமூக வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றனர். அனுபவங்கள் புத்தக வடிவில் வெளிவரும் போது அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்து மனதில் பதிய வைத்திருந்ததால் தான் காந்தியடிகள் தேச சுதந்திர போராட்டத்தில் சத்தியம், அஹிம்சையை கடைசி வரையிலும் கடைபிடித்தார்.

பழங்கால பிரபலங்களின் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் ரண்டார்கை உதவியோடு புத்தகம் வெளியிடச் செய்தோம். அது பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இது போல் அகராதிகளை வெளியிடவும் உதவியிருக்கிறோம்.

புத்தக தேடல் என்பது எப்போதும் குறையாதது. இன்றைய வாழ்வியல் சூழலில் பலருக்கு படிக்க நேரம் இல்லையென்றாலும் புத்தகம் வாங்குவது குறையவில்லை. பேப்பர்,பென்சில் உபயோகம் குறைந்து கணினி யுகத்தில் நாம் இருக்கிறோம். ஆனாலும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஒரு சதவீதம் கூட குறையவிóலலை. அவரவர்கள் வயதுக்கு தகுந்தபடி புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்கள்.

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பிக்கும் போது புத்தகங்கள் விற்பனையாகுமா என மிகவும் தயங்கினார்கள். ஆனால், இன்றைக்கு 220க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்த போதும் மேற்கொண்டும் அரங்குகளை அமைக்க இடம் கேட்கின்ற நிலை உள்ளது. அரிய தகவல்களை புத்தகங்களில் தான் பார்க்க முடியும். அந்த வகையில் புத்தகங்களை வழங்குவதை சேவையாக செய்வதை பாராட்டுகிறேன் என்றார்.

ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்: புத்தகங்களை வாசிப்பதை ஒவ்வொருவரும் கலையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். வரலாறுகளையும் இலக்கியங்களையும் புத்தகங்கள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ளமுடியும். வாசிóக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதாக இந்த புத்தகத் திருவிழா உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் குடும்பத்தோடு வரவேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள் மாணவர்களுக்கு உதவும். புத்தகம் படிக்க நேரம் ஒதுக்குவது குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி புத்தகங்களைப் படிக்க கூடுதல் நேரத்தை செலவிடவேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் வரவேற்றுப் பேசிய பபாசி தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம், லாப நோக்கமற்ற இயக்கமாக பபாசி உள்ளது. வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கம். சென்னை, மதுரையில் நேரடியாகவும், மற்ற நகரங்களில் பிற கண்காட்சிகளுக்கு உதவியாகவும் புத்தக விழாக்களை நடத்தி வருகிறோம் என்றார். பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment