தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 4, 2014

காரமடை,கண்ணார்பாளையத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு இலவச சீருடை.



கோவை விஜயலட்சுமி பொதுநல அறக் கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வழங்கினார்.
மேட்டுப்பாளையம்.ஆகஸ்ட்.4.
காரமடையை அடுத்த கன்னார்பாளையம், ராஜலட்சுமி சாமப்பா குடும்பத்தினர் சார்பில், சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவ மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னார்பாளையம் அரசுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் சா.ஞானசேகரன் தலைமை வகித்தார். காரமடை ஊராட்சி ஒன்றியகுழு  தலைவர் எம்.எஸ். ராஜ்குமார், தொழிலதிபர்கள் நந்தகுமார், இளங்கோ, சாமப்பா, நல்லாசிரியர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அருளாசி வழங்கி சுவாமி சஹனானந்தர் பேசியது: பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியர்களே என்றும் வழிகாட்டிகளாக உள்ளனர். இயற்கையாகவே குழந்தைகள் அறிவுடன் இருந்தாலும், கல்விதான் அவர்களை மேலும் அறிவுள்ளவர்களாக்குகிறது.உழைப்பையும், நேர்மையையும் கடைபிடித்து வாழ்ந்தால், வெற்றிகளை அடைவதுடன் பிரகாசமான வாழ்வையும் பெற முடியும் இன்று கல்வி நம்மைத் தேடி வருகிறது. இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.என்று  பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் சுவாமி சஹனானந்தர் தெரிவித்தார்
விழாவில் பள்ளிக் குழந்தைகள் 1000 பேருக்கு இலவசச் சீருடைகளை கோவை விஜயலட்சுமி பொதுநல அறக் கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வழங்கினார்.
சிக்காரம்பாளையம் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பரளி, அத்திக்கடவு, பில்லூர், சீங்குளி, கோபனாரி, மேல்பாவி ஆகிய ஆதிவாசி கிராமப் பள்ளிகளின் மாணவர்கள் என 1000 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், உலக சமுதாய சேவா சங்கத்தின் மண்டல துணைத் தலைவர் ஆர்..வெள்ளியங்கிரி, ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை ரத்ததானப் பிரிவு அமைப்பாளர் எஸ்.ஜோதிமணி, புலவர் பழ.அரங்கப்பன், பெள்ளாதி ஊராட்சித் தலைவர் பூபதி, சிக்காரம் பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் எஸ். பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment