தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 9, 2014

ஈரோடு புத்தக திருவிழா: நல்ல மனிதர்களை புத்தகங்கள் உருவாக்கும்

 
ஈரோடு, மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இதில் ‘‘உயிரின் சுவாசம் அல்லவா புத்தகம்’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் மரபின் மைந்தன் ம. முத்தையா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

புத்தகங்கள் நல்ல மனிதர்களை உருவாக்கும். அவர்களின் எண்ணங்களை கூர்தீட்டும். வாசிப்பினால் உள்ளம் விரிவடையும். பழைய மரபுகளுக்கு ஊக்கம் தருபவை புத்தகங்கள் தான். எனவே வாரத்தில் ஒரு புத்தகமாவது படிக்க வேண்டும்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளை மிஞ்சுவதற்கு இன்னும் உலகில் இலக்கியங்கள் வரவில்லை.

உங்களுக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால் நண்பரை தேடி செல்ல முடியாது. அப்போது திருக்குறளை புரட்டினால் தீர்வு கிடைக்கும். பிரச்சினையும் தீர்ந்து விடும்.

இவ்வாறு அவர்கூறினார்.

முன்னதாக ‘‘அறிவே கடவுள்’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து பேசினார்.

அப்போது, ‘‘பழைய தலைவர்களின் நல்ல சிந்தனைகள், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்கும் அரசியல் இயக்கத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்’’ என்றார்.

0 comments:

Post a Comment