தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 20, 2014

விநாயகர் சதுர்த்தி ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டாம்: ஆட்சியர் வே.க.சண்முகம்




விநாயகர் சதுர்த்தியையொட்டி, ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டாம் என ஆட்சியர் வே.க.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி: ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்குப் பின், நீர்நிலைகளில் கரைப்பதால் அவை மாசுபடுகின்றன. எனவே, களிமண்ணால் செய்யப்பட்டது சிலைகளையும், ரசாயன கலவையற்ற கிழங்கு மாவால் செய்யப்படும் சிலைகளையும் மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

வழிபாட்டுக்குப் பின், ஈரோடு பள்ளிபாளையம் காவிரிபாலம், திட்டுப்பாறை -கீழ்பவானி - கால்வாய், கூடுதுறை, செய்யம்பாளையம், தடப்பள்ளி கால்வாய், வரசக்தி விநாயகர் கோவில்-பவானி ஆகிய நீர்நிலைகளில் மட்டும் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment