தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 11, 2014

புத்தகம் வாசிக்க ஒரே இடத்தில் கூடிய 15,000 பேர்

 



ஈரோட்டில் ஒரே இடத்தில் 15,000 பேர் ஞாயிற்றுக்கிழமை கூடி ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தனர். வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், இந்த மெளனப்புரட்சியில் ஈடுபட்டனர்.

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி, வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் "ஈரோடு வாசிக்கிறது' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந் நிகழ்ச்சி ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.

மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மக்கள் என 15,000 பேர் கூடினர்.

இவர்கள் மைதானத்தின் ஓரத்தில் காலரிகளில் அமர வைக்கப்பட்டனர்.

காலரின் உயரமான பகுதியில் முதல் வரிசையில் ஆட்சியர் சண்முகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக செயலர் எஸ்.சிவானந்தன், எம்.பி.நாச்சிமுத்து என்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி

தாளாளர் வசந்தா சுத்தானந்தன், நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன்

ஆகியோர் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்.

ஆட்சியர் சண்முகம் சித்தர் பாடல்கள் என்ற நூலையும், காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, பட்டினத்தார் பாடல்கள் என்ற நூலையும், ஸ்டாலின் குணசேகரன் கமலாம்பாள் சரித்திரம் என்ற நூலையும், சிவானந்தன் நேரு "உள்ளும், புறமும்' என்ற நூலையும், வசந்தா சுத்தானந்தன் "அக்னி சிறகுகள்' என்ற நூலையும் வாசித்தனர்.

வெயில் கொடுமையையும் கண்டுகொள்ளாமல் 15,000 பேரும் ஒரு மணி நேரம் சிறிதும் சப்தம் இன்றி வாசித்தனர்.

ஒருமணி நேரம் முடிந்ததும் அனைவரும் தாங்கள் படித்த புத்தத்தை தலைக்கு மேல் உயர்த்தி காண்பித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மரத்தடியில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர்.

மாணிக்கம்பாளையத்தில் நூலகம் அருகே மரத்தடியில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்.

ஆர்.என்.புதூரில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 100 மாணவ, மாணவியர் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர். மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் "ஈரோடு வாசிக்கிறது' என துணிகளில் எழுதி

வைத்து புத்தகங்களை வாசித்தனர்.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 15,000 பேர் கூடி புத்தகங்களை வாசித்து, ஈரோட்டில் மெளனப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment