தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 21, 2014

புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலைய 36 கடைகள் பொது ஏலம்
- நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல்




புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 21:

புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள 36 புதிய கடைகளுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று பொது ஏலம் நடைபெறும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கடைகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ரூபாய் 2 கோடி அறிவித்து ஆணையிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியினை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க பட்டுள்ள நகராட்சிக்கு சொந்தமான 36 புதிய கடைகளுக்கு பொது ஏலம் அறிவிக்க பட்டுள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆணையாளர் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

பொது ஏலம் குறித்து பொதுமக்கள் மற்றும் ஏலம் எடுப்பவர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் சந்தேகங்களை வெள்ளிகிழமை (ஆகஸ்ட் 22) மாலை 3 மணிக்கு நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சரவணகுமார்(பொ) கூறும் போது,  ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான  புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 36 கடைகளுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது. ஏலம் எடுப்பவர்கள் மாத வாடகை உரிமை விபரத்தினை எழுத்து மூலம் எழுதி வங்கி வரைவோலைகளுடன் தனி கவரில் ஒட்டி சீல் வைத்து அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் காலை 10 மணி வரை  போடலாம். அன்றே 10.30 மணிக்கு பகிரங்க பொது ஏலம் நடத்தப்படும். இதற்காக ஏல டேவணி தொகை ரூபாய் 2 லட்சம் என நிர்ணயிக்க பட்டுள்ளது. ஏல உரிமையின் கால அளவு 3 ஆண்டுகளாகும். 12 மாத வாடகை உரிமத்திற்கு செலுத்தப்பட வேண்டிய முன்வைப்பு தொகையாகும். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் அலுவலக வேலை நாட்களில் நகராட்சி பொதுபிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment