தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 4, 2014

பவானிசாகர் வட்டாரத்திலேயே முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி




புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 4:

புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள வகுத்துகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு அனைவர்க்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

புன்செய் புளியம்பட்டி - நம்பியூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது வகுத்துகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி. இதில் 25 இகும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.  இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாறைபுதூர் மற்றும் அருகிலுள்ள சிறிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு சுமார் 1 முதல் 11/2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வர வேண்டியுள்ளது. போதிய பேருந்து வசதி மற்றும் வாகன வசதி இல்லாததால் மாணவர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தனர். மேலும் மழைகாலங்களில் மாணவர்கள் வருகை முழுமையாக குறைந்து வந்தது. இதை தவிர்க்க முடிவு செய்த பள்ளி நிர்வாகம் அனைவர்க்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும்  மீண்டும் மாலையில் வீட்டுக்கு கொண்டு விடவும் வாகன வசதி செய்ய முடிவு செய்து அதன்படி பவானிசாகர் வட்டாரத்திலேயே முதல் முறையாக அரசு பள்ளிக்கு  வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்கவிழாவில் பவானிசாகர் ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி பிளாரன்ஸ், பவானிசாகர் ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயராணி, ஆசிரிய பயிற்றுனர் கே.மூர்த்தி, காரப்பாடி  ஊராட்சி தலைவர் கே. வெள்ளிங்கிரி, வார்டு உறுப்பினர் கே.ஆறுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஆனந்தலட்சுமி, உதவி ஆசிரியர் த.அருள்முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னசாமி, ஊர் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

வாகன வசதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு மேலும் பலர் பள்ளியில் சேர வாய்ப்புள்ளது என தலைமை ஆசிரியர் தெரிவித்தார். வாகன வசதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment