தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 27, 2014

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி மாணவி பவித்ரா  இரண்டாமிடம்! - ரூபாய் 25000 ரொக்கப்பரிசு வென்றார்








புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 29:

         திருச்சி துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாமிடம் பெற்று ரூபாய் 25000 ரொக்கப்பரிசு வென்றார்.

        புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி திருச்சி துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் 58 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட அளவிலான கண்காட்சிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களின் படைப்புகள் இறுதிப்போட்டியில் இடம்பெற்றன. 9 ஆம் வகுப்புக்கு கீழ் படிக்கும் மாணவர்கள் இளையோர் பிரிவிலும், 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களை மூத்தோர் பிரிவிலும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜூனியர், சீனியர் பிரிவு என மொத்தம் 115 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். சிக்கனம், சேமிப்பு, செல்வம் என்ற தலைப்பின் கீழ் மாவட்ட அளவிலான கண்காட்சி நடைபெற்றது. மின்சார சிக்கனம், மாற்று எரிசக்தி, பொருட்களை மறுசுழற்சி செய்தல் என பல படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.

           இதில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா தனது கண்டிபிடிப்புகளான நிலக்கடலை பறிக்கும் எந்திரம் மற்றும் களை பறிக்கும் எந்திரம்  உள்ளிட்ட படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தார். மூத்தோர் பிரிவில் மாணவி பவித்ரா இரண்டாமிடம் பெற்றார். இதற்கான பரிசுதொகை 25000 ரூபாய்க்கான காசோலையை புதிய தலைமுறை தலைமை செயல் இயக்குனர் ஷ்யாம் சுந்தர் வழங்க மாணவி பவித்ரா பெற்று கொண்டார்.

          இந்நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் சுந்தரராஜன், தினமலர் இணையாசிரியர் ராமசுப்பு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் மேலாளர் பாலமுருகன், திருச்சி மண்டல மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர்,  எஸ்.ஆர்.சி. மெட்ரிக் பள்ளி ஆசிரியர் என்.பிரேம்நாத்,மாணவி பவித்ராவின் பெற்றோர் ராஜா சுரேந்தர் - ராதா உள்பட பலர் பங்கேற்றனர்.



0 comments:

Post a Comment