தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 28, 2014

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு ! - சத்தி நகராட்சி அதிரடி


நகராட்சியினரால் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்

திப்புசுல்தான் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை ஜேசிபி மூலம் இடித்து அகற்றும் நகராட்சி பணியாளர்கள்

சத்தியமங்கலம்,ஆக 28:
சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட திப்புசுல்தான் சாலையில்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட 75க்கும் மேற்பட்ட வீடுகள், வணிககடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி. மழைநீர் வடிகால்கள் மொத்த நீளம் 63.5 கிமீ. நகராட்சி நிலஅமைப்புப் படி இந்த  வடிகால்கள் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள  சிறு சாக்கடைகளை அகற்றிவிட்டு எதிர்கால தேவைக்கேற்ப மழைநீர் வடிகால் கட்டுவதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் நகராட்சி இறங்கியது.

ஆக்கிரமிப்பாளர்கள் தானாகவே முன்வந்து கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றப்படும் என தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது.10க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மட்டுமே  தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.  அப்புறப்படுத்தபடாத கட்டடங்களை சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார அலுவலர் கே.சக்திவேல், நகரமைப்பு ஆய்வாளர் சி.செல்வன்,வருவாய் ஆய்வாளர் ஆயிஷா ஆகியோர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்து ஜேசிபி மூலம் இடித்து அகற்றி வருகின்றனர். மேலும், அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment