தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 27, 2014

ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

 


நெல்லை: எர்ணாகுளம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ 10 லட்சம் காப்புத் தொகை செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். மோகன் லால் - மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நாயகனாக கமல் ஹாஸன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் கவுதமி.

இந்த நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும், மற்ற மொழிகளில் ரீமேக் செய்த போது தனக்கு விவரம் தெரியவில்லை. எனவே தமிழ் ரீமேக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் எழுத்தாளர் சதீஷ் பால் மனுத்தாக்கல் செய்தார். சதீஷ் பால் நாவலைப் படித்துவிட்டு த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த நீதிபதி, இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், காப்புரிமை சட்டப்படி குற்றமாகும் என்கு கூறி தமிழ் ரீமேக்குக்கு தடை விதித்தார். படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றால் ரூ 10 லட்சத்தை காப்புத் தொகையாகக் கட்டிவிட்டு தொடங்கலாம் என்று படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டார். இதனை ஏற்று ரூ 10 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர் கமல் மற்றும் படக்குழுவினர். திருநெல்வேலியின் எழில் மிகுந்த பகுதிகளில் பாபநாசம் படப்பிடிப்பு நடக்கிறது.

0 comments:

Post a Comment