தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 30, 2013

டிசம்பர் 1  - இன்று உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம்
************************************************************
       இன்று உலக அளவிலே அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ். இந்நோய்க்கு மருந்து கிடையாது. எய்ட்ஸ் நோய்க்கு முடிவு மரணம் மட்டுமே. எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறை மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கபடுகிறது.

எச்.ஐ.வி. :-

எச்.ஐ.வி. கிருமி மனித உடலில் உள்ள வெள்ளை அணுக்களை நேரடியாக தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பல நோய்கள் தக்க வழி செய்கிறது.

எய்ட்ஸ் ;-

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொது பல சந்தர்ப்பவாத நோய்கள் ஏற்படும் நிலையே உள்ளது.

எச்.ஐ.வி. /
எய்ட்ஸ் எவ்வாறு பரவுகிறது?
  • பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உடலுறவு கொண்டால் எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு பரவும்.
  • பரிசோதிக்க படாத எச்.ஐ.வி. கிருமி உள்ள இரத்தம் பெறுவதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும்.
  • எச்.ஐ.வி. தொற்றுள்ள கர்ப்பிணி பெண்ணிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது.
  • கிருமி தொற்றுள்ள சுத்தம் செய்யபடாத ஊசிகளை பகிர்ந்து கொள்வதால் பரவும்.
எச்.ஐ.வி. / எய்ட்ஸ் இவைகள் மூலம் பரவாது!

  • ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்ற சாதாரண பழக்க வழக்கத்தினால் பரவாது.
  • எச்.ஐ.வி. தொற்று உள்ள ஒரு நபரின் இருமல் மற்றும் தும்மலின் மூலம் மற்றவருக்கு பரவாது.
  • எச்.ஐ.வி. தொற்று உள்ள ஒரு நபர் பயன்படுத்திய கழிவறையை மற்ற நபர் பயன்படுத்துவதன் மூலம் பரவாது.
  • எச்.ஐ.வி. உள்ள நபர் பயன்படுத்திய பொருட்களை மாற்றிகொள்வதால் பரவாது.
  • கொசுகடி மூலம் பரவாது.
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள்!
  • மனைவியை மட்டுமே நேசி! எய்ட்ஸ் வருமா யோசி!
  • சாதிக்கும் வயதில் சபலம் வேண்டாம். சபலம்தான் மரணத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி!
  • ஒருவனுக்கு ஒருத்தி என்பது நியதி! அதை மறந்தால் எய்ட்ஸ் வருவது உறுதி!
  • திருமணம் வரை காத்திருப்பீர்! மணவாழ்க்கை ஒன்றே எய்ட்ஸ்ஐ தடுக்கும்.
  • ஆணுறை எய்ட்ஸ்ஐ தடுக்கும். மனக்கட்டுப்பாடு ஒன்றே எய்ட்ஸ்ஐ தவிர்க்கும். 

கட்டுரையாளர்:
**********************
எஸ்.ஜெயகாந்தன், செயலாளர்,
விடியல் சமூகநல இயக்கம், புன்செய் புளியம்பட்டி

0 comments:

Post a Comment