தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 16, 2013

சத்தி புலிகள் காப்பகத்தில் இன்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் டிச.16(திங்கள்கிழமை) முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்புபணி தொடங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர், தலமலைவனச்சரகங்களிலும், ஆசனூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட ஆசனூர், கேர்மாளம்,தாளவாடி வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டுக்கான பணி டிச.16 முதல் துவங்குகிறது.  இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணைஇயக்குனர் ராஜ்குமார் கூறியதாவது. வனவிலங்குகளின் நடமாட்டம், வாழ்விடம் மற்றும் உணவு குறித்த கணக்கெடுப்பு பணியில் 50 குழுக்கள் ஈடுபடுவர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் வரை இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் வனத்துறையினருடன் தொண்டு நிறுவன ஊழியர்கள், வன ஆர்வலர்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆகியோரும் இணைந்து கணக்கெடுப்புப்பணிக்கு உதவியாக இருப்பார்கள். வனத்தில் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று புலி மற்றும் சிறுத்தையின் நடமாட்டம், எச்சில், கால்தடங்களும், 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மான் உள்ளிட்ட பிற விலங்குகள் குறித்து 5 மாதிரிகள் எடுக்கும் பணியும், தாவர உண்ணிகள், இரை விலங்குகள், மரங்களின் வகைகள்குறித்தும் தொடர்ந்து 8 நாட்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அதன் முழு விவரத்தினை புலிகள் காப்பக களஇயக்குனர் மூலம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு  அனுப்பப்படும் என்றார்

0 comments:

Post a Comment