தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 18, 2013

பண்ணாரி காட்டில் புலி,சிறுத்தை கால்தடம்
பெல்லாரி வனத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள வனக்கல்லூரி மாணவிகள் மற்றும் வனத்துறையினர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்புபணியில் பண்ணாரி காட்டில் சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் உள்ளதை கால்தடம் மூலம் உறுதி செய்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர், தலமலை வனச்சரகங்களிலும், ஆசனூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஆசனூர், கேர்மாளம், தாளவாடி வனச்சரகங்களில் வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது. 


புலிகள் எச்சத்தை பதிவு செய்யும் கணக்கெடுப்பாளர்கள்
பண்ணாரி, சீரங்கராயன்கரடு, கேர்மாளம், தலமலை,  எக்கத்தூர், ஜீரஹள்ளி உள்ளிட்ட 48 இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 288 பேர் கலந்துகொண்டனர். பண்ணாரி பெல்லாரி வனத்தில் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் எஸ்.சண்முகம் தலைமையில் 
வனக்கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது, இலந்தைப்பழத்தின் கொட்டைகள் கிடப்பதை பார்த்து அது கரடியின் எச்சம் என்பதை கண்டுபிடித்தனர். அடுத்துள்ள  பகுதியில் சிறுத்தையின் கால்தடத்தை பார்த்தனர். பெல்லாரி கோவில் அருகே புலியின் கால்தடத்தையும் சற்றுதூரத்தில் அதன் எச்சம் கிடப்பதையும் பதிவு செய்தனர்.அடர்ந்த பகுதியில் 10 கிமீ தூரம் வரை கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறையினர்  பிற விலங்குகளின் தடயங்களையும் சேகரித்தனர்.
சிறுத்தையின் கால்தடம்
 பவானிசாகர் சீரங்கராயன் கரடு, தெங்குமரஹாடா, எக்கத்தூர் பகுதிதியில் புலியின் காலதடத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் அனைத்து காட்டுப்பகுதிகளிலும் யானை,காட்டெருமை, மான்கள்,காட்டுப்பன்றி நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது. கேர்மாளத்தில் கரடி, செந்நாய், சிறுத்தையும் நடமாட்டத்தை உறுதிபடுத்தினர். வரும் 21ம் தேதி வரை நடைபெறும் கணக்கெடுப்பில்  தாவர உண்ணிகள், இரை விலங்குகள், மரங்களின் வகைகள் பதிவு செய்யப்படும் என வனவிலங்குகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment