தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 17, 2013

சத்தியில் பூ விவசாயிகளுக்கு மதிப்புகூட்டு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி 
*****************************************************************************
சத்தியமங்கலம் பூ வியாபாரிகளுக்கு மதிப்புக்கூட்டு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு பூ மார்க்கெட் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் 50 பேர் உள்மாநில விவசாயிகள் பயிற்சி சுற்றுலாவாக சத்தியமங்கலம் வந்தனர். இவர்கள் சத்தியமங்கலம் தமிழ்நாடு விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில் வேளாண் பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளித்தனர்.  சங்கத்தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

குமரி மாவட்ட தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் பேசுகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க வேண்டும். பூ விற்பனையில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டுவதும் அதனை எவ்வாறு சந்தைப்படுத்துவது போன்ற வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறினார். 

இந் நிகழ்ச்சியில் நாகர்கோவில் உதவி வேளாண் அலுவலர் சுனில்தத், உதவி வேளாண் அலுவலர் லட்சுமணன்,சத்தி பூ  விவசாயிகள், குமரி மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment