தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 6, 2013

டிசம்பர்  - 7 இன்று கொடி நாள் !

***************************************************************
புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 7:  

     
 புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கொடிநாள் குறித்து கூறி இருபதாவது.         
       
       நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் கண்ணாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .இதை அடுத்து  ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .

      அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன . ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .

     


கொடிநாள், நம் இந்தியாவை உலகுக்கு அடையாளப்படுத்தும் நமது தேசியக் கொடியைப் போற்றும் திருநாள்.வடபுலத்தே பனி படர்ந்த இமயமலை, எஞ்சிய முப்புறங்களிலும் விரிந்து பரந்துள்ள கடல்வெளிகள். இந்த எல்லைப் புறங்களைக் காப்பதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடும் போதும், இன்னுயிர் ஈந்தும், இடுக்கண் பல ஏற்றும், சொல்லொணாத் தொல்லைக்கு முப்படை வீரர்கள் ஆட்படுகின்றனர்.அவர்களைக் களத்துக்கு அனுப்பி விட்டுக் கனத்த இதயத்தோடு இல்லங்களில் காத்திருக்கும் இதயங்களுக்கும், "நாங்கள் இருக்கிறோம், உங்களைக் காக்க, நாடு இருக்கிறது உங்கள் நலம் பேண' என நம்பிக்கையளித்திடும் நாள், இந்தக் கொடிநாள். 
இந்நாளில் நல்ல உள்ள கொண்ட அனைவரும் கொடிநாள் நிதி அளிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த கொடிநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment