தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 17, 2013

சத்தியில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ பெருவிழா 
*********************************************************************
ஆருத்ரா தரிசனத்தையொட்டி சத்தியமங்கலத்தில் புதன்கிழமை சிவகாமியோடு ஸ்ரீநடராஜர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியும் சிவாலயங்களில்  திருவாதிரையும் விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி, சத்தியமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ பெருவிழா பாலிகை தெளித்தலுடன்(டிச.13) துவங்கியது.  செவ்வாய்க்கிழமை மாலை  மாப்பிள்ளை அழைப்பும்  பிற்பகலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்வசம்  மற்றும் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வீதியுலாவும் நடைபெற்றன. புதன்கிழமை காலை நடராஜருக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. விழாவையொட்டி, உற்சவர் சிவகாமி மற்றும் நடராஜ் தனித்தனியாக மலர்சப்ரத்தில் அமரவைத்து 12 முறை அரச மரத்தை சுற்றிவந்து ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்ந்தனர்.

வியாழக்கிழமை (டிச.19) தோழிப்பொங்கல், வெள்ளிக்கிழமை நாகவல்லி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது.


சத்தி பவானீஸ்வரர் ஆலயத்திலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த திருக்கல்யாண வைபவமும் அதனைத் தொடர்ந்து  ஊஞ்சல் உற்வச நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். புதன்கிழமை அதிகாலை மஹா அபிஷேகமும் அலங்கார தரிசனமும் நடைபெற்றன. பிறகு, மலர் அலங்காரத்தில் ஸ்ரீசிவகாமி அம்மனோடு ஸ்ரீநடராஜர் பெருமான் வீதியுலா வந்தார். நடராஜர் ஊர்வலத்தில் குழந்தைகள், பெண்கள் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் நடராஜபெருமானை வழிபட்டனர்.  குலாலர் வீதியில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு  நடராஜை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment