தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 12, 2013

அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
************************************************************
சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


புதிய தலைவராக எஸ்.என்.ஜவஹர், துணைத்தலைவராக எஸ்.ஏ.அஜ்மல் அலி, செயலாளராக எஸ்.என்.சிவக்குமார், துணைச்செயலாளராக கே.சுப்பிரமணி, பொருளாளராக எஸ்.கே.நாகராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு  அனைத்து வணிகர் சங்க அமைப்பாளர் குமார.ரவிக்குமார் தலைமை வகித்தார்.நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் ஈரோடு மாவட்ட  தலைவர் ஏ.எம்.தேவராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகளை பாராட்டி  மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாவட்ட பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் பேசினர். பன்னிரெண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட முன்னாள் செயலாளர் சேவியருக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.விழாவில், நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் விவேகானந்தன், சந்திரன், அஸ்கர் அலி, தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment