தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 3, 2013

ஆசனூரில் நான்காவது புலிகள் காப்பகம்  துவக்க விழா
****************************************************************************
தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமான சத்தியமங்கலம் புலிகள் காப்பக துவக்க விழா ஆசனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதமலை, கோவை மாவட்டம் ஆனமலை, நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து,  நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டம் அறிவிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது. 


சத்தியமங்கலம் வனக்கோட்டம் ஆசனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகள் காப்பக துவக்க விழாவிற்கு  சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் கே.ராஜ்குமார் தலைமை வகித்தார்.  ஆசனூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் பி.பாரிவி வரவேற்றார். 

விழாவையொட்டி, ஆசனூர் அரசு மேல்நிலைப்பள்ளயில் இருந்து புறப்பட்ட புலிகள் காப்பக துவக்கவிழா பேரணி மைசூர் சாலை வழியாக வனச்சரக அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் பள்ளி மாணவ,மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வனக்குழுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட புலிகள் காப்பகம் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் கே.ராஜ்குமார் கூறியது:
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையின் படி 2013ம் ஆண்டு மார்ச் மாதம் சத்தி  வனக்கோட்டத்தில்  1.40 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. சத்தியமங்களம் வன பகுதிகளில் அறிவித்தது 
தற்போது, இது நான்காவது புலிகள் காப்பகாமாக உள்ளது. புலிகள் காப்பகத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ1.40 கோடி நிதி கிடைக்க உள்ளது. நிர்வாகம் மற்றும் வனப்பாதுகாப்பு கருதி, சத்தி வனக்கோட்டம் பெரிய வனப்பரப்பளவை கொண்டுள்ளதால் இதனை இரண்டாக பிரித்து ஆசனூரிர்  துணை இயக்கநர் அலுவலகமும் மற்றும் சத்தியமங்கலதிதல் துணை இயக்குநர் அலுவலகம் என அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் காப்பக நெறிமுறைகளின் படி வனவிலங்குகள் பாதுகாக்கப்படும். தற்போதுள்ள வேட்டைத்தடுப்பு காவலர்கள் எண்ணிக்கை 63இல் இருந்து 150ஆக உயர்த்தப்படும்.கிராமமக்கள் உதவியுடன் வனம் மற்றும் விலங்குகள் பாதுகாக்கப்படும். புலிகள் காப்பகம் நடைமுறைக்கு வந்துள்ளதால் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும், புதியதாக கட்டுபாடுகள் எதுவும் விதிக்கப்படமாட்டது. மலைவாழ்மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

0 comments:

Post a Comment