தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 9, 2013

கடும் பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு: மல்லிகை கிலோ ரூ. 900 ஆக உயர்வு
******************************************************************************

கடும் பனிப்பொழிவு காரணமாக சத்தி பகுதியில் மல்லிகைப்பூ உற்பத்தி ஒன்றரை டன்னாக குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.900 ஆக உயர்ந்துள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, பவானிசாகர்,தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி, முல்லைப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தினமும் 25 டன் பூக்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலவும்  கடும்பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து ஒன்றரை டன்னாக குறைந்தது. இதனால் பூக்களின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது. 

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 150 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி ஏக்கருக்கு அரை கிலோவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக சத்தியமங்கலம் தனியார் பூ மார்க்கெட்டு பூக்களின் வரத்து 25 டன்னில் இருந்து ஒன்றரை  டன்னாக சரிந்துவிட்டதால்  ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மல்லிகை கிலோ ரூ.900க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ ரூ.600க்கும் கடந்த மாதம் கிலோ ரூ.600க்கு விற்கப்பட்ட சம்பங்கி  ரூ.120-க்கும் விற்கப்பட்டது.  

இது குறித்து தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர் தலைமைச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்  கூறியது: சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனி பொழிவதால் மெட்டுகளில் பச்சைப்புழு தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மருந்து தெளித்தாலும் அவை அழிவதில்லை. இதனால் பூக்களின் உற்பத்தி 80 முதல் 90 சதவீதம் குறைந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 500 கிலோ உற்பத்தியான சம்பங்கி தற்போது 150 கிலோவாக சரிந்துவிட்டது.  நாள்தோறும் கோவை,கேரளா, பெங்களூரு, பாலக்காடு மற்றும் திருவணந்தபுரம் போன்ற நகரங்களுக்கு வேன், கார் மூலம் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.

0 comments:

Post a Comment