தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 18, 2013

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. செயற்குழு– பொதுக்குழு கூட்டம்: நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்
************************************************************************************


பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் – புதுச்சேரியில் உள்ள 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தொண்டர்களை தயார் செய்வதற்காகவும், தேர்தல் வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காகவும் கட்சியின் செயற்குழு – பொதுக்குழுவை கூட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். அவரது அறிவிப்பின்படி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி போலஸ் மண்டபத்தில் இன்று அ.தி.மு.க. பொதுக்குழு – செயற்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்க வேண்டிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்களும் வானகரத்தில் வந்து குவிந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் – முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. முதலில் செயற்குழுவும் அடுத்து பொதுக்குழுவும் கூடுகிறது.

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். முன்னதாக வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்துக்கு வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. செயற்குழு – பொதுக்குழு கூடுவதையொட்டி, முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக போயஸ் கார்டனில் இருந்து வானகரம் மண்டபம் வரை கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வாழை மரத்தோரணங்கள், வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்க வழிநெடுக தொண்டர்கள் திரண்டு நின்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பேசுகிறார்கள். அப்போது 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் என்று சபதம் ஏற்கின்றனர்.

 

நிர்வாகிகள் கருத்தை அறிந்த பிறகு முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது தொண்டர்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக எப்படி பாடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார். தேர்தலில் கட்சியின் வியூகம் குறித்து கருத்துக்களை தெரிவிக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிரமாக பாடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள சாதனைகளுக்கும், மக்கள் நலனுக்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது, எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட தேர்தல் பற்றிய அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

வரவேற்பு ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, துணை மேயர் பெஞ்சமின், அம்பத்தூர் நகரச் செயலாளர் அலெக்சாண்டர், மாவட்ட துணை செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் முன்னின்று செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment