தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 13, 2013

வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி
*****************************************************

சத்தியமங்கலம், டிச.14. சத்தியமங்கலம் பகுதியில் வாழையில் ஊடுபயிராக செண்டு மல்லி பயிரிடப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி செல்லும் சாலையில் சிக்கரசம்பாளையம் பிரிவு அருகே விவசாயி பலராம் மணிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் தோட்டத்தில் சம்பங்கி மற்றும் ஆந்திரா ரஸ்தாளி ரக வாழை பயிரிட்டுள்ளார். பாசனத்திற்கு சொட்டுநீர் பாசன வசதி செய்துள்ளார். வாழை நடவு செய்து 4 மாதங்கள் வரை நிலத்தில் நிழல் கட்டாமல் நன்கு வெளிச்சம் கிடைப்பதால் ஊடுபயிராக  வெங்காயம், உளுந்து, தட்டை போன்ற பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக பலராம்மணி வாழைகளுக்கு இடையே செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்த சொட்டுநீர்ப்பாசனம் முறையில் பாசனம் செய்து வருகிறார். நடவுசெய்த இரண்டு மாதங்களிலேயே செண்டுமல்லி பூ பூத்து பலன் தர தொடங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயி மணி கூறியதாவது. ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்துள்ளதால் களைகள் கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி  வழக்கமாக உள்ள செண்டுமல்லியை விட மஞ்சள்நிற செண்டுமல்லி கிலோவுக்கு ரூ.5 அதிகமாக கிடைப்பதால் ஆண்டு பயிரான வாழைக்கு செலவாகும் களைவெட்டுக்கூலி, உரம் உள்ளிட்ட இடுபொருள் செலவை ஊடுபயிரில் வரும் வருமானத்தின் மூலம் ஈடுகட்டிக்கொள்ள முடியும் என்றார். நெடுஞ்சாலையோரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் செண்டுமல்லி பூக்கள் பூத்துள்ள அழகை பண்ணாரி செல்லும் பயணிகள் சிறிதுநேரம் நின்றுரசித்து செல்கின்றனர்.

0 comments:

Post a Comment