தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 17, 2013

நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி?
***********************************************************
           வேலைதேடும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் நேர்முக தேர்வை எதிர் கொள்வது குறித்து பின்வரும் கட்டுரையில் விளக்குகிறார் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்.

       அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற எழுத்துதேர்வு மட்டுமன்றி நேர்முக தேர்வு மற்றும் குழு விவாதம் ஆகியவற்றையும் சந்தித்தாக வேண்டும். வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமின்றி உயர் கல்வி படிப்பில் சேரவும் நேர்முக தேர்வு மற்றும் குழு விவாதம் தேவைபடுகிறது.

         நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1. கல்வி தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. குழுவிவாதம்
4. நேர்முகத் தேர்வு

முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.

இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.

முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.

   நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை 
1.தனித்திறமைகள் 
2. தலைமைப் பண்பு திறமை 
3.தொழில்நுட்பம், கல்வி மற்றும் பணித்திறன் 
4. பொது விஷயங்களில் ஆர்வம் 
5.தனிப்பட்ட குணாதிசயங்கள்

     இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

     எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம். இதன் மூலம் வெற்றியும் நம்மைத் தேடி வரும்.
நேர்முக தேர்வின் போது செய்க:
  • பேட்டி அறைக்குள் நுழையும் போது மலர்ந்த முகத்துடன் செல்க
  • பேட்டி காண்போர் இருக்கையில் அமர சொன்ன பின்னரே உட்காருக
  • இருக்கையில் அமரும்முன் பேட்டி காண்பவருக்கு வணக்கம் தெரிவிக்கவும்.
  • இருக்கையில் நேராக விறைபின்றி அமர்க.
  • சான்றிதல்களையும், இதர ஆவணங்களையும் முறைபடுத்தி கோர்த்தி வைக்கவும்.
  • கேள்வியை நிதானமாக கூர்ந்து கேட்கவும்.
  • மென்மையான மற்றும் தெளிவான குரலில் பேசுக.
  • தெளிவான பதிலை கூறவும்.
  • தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் பதில் உரைக்கவும்.
  • தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு பதில் உரைக்கவும்.
  • பதிலுரைக்க இயலாத நிலையை திறந்த மனதுடன் ஒப்பு கொள்ளவும்.
  • சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில் உரைக்கவும்.
  • உங்களை பற்றிய உண்மையான விபரங்களையே பேட்டியின் போது தெரிவிக்கவும்.
  • பேட்டி முடிந்தது என தெரிவித்த பின்னரே இருக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
  • வெளிசெல்லும் முன் பேட்டி காண்போருக்கு தவறாது நன்றி தெரிவிக்கவும்.
நேர்முக தேர்வின் போது செய்யற்க:
  • அதிவேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ செல்லாதீர்.
  • பேட்டி அறைக்குள் நுழையும்போது குனிந்த தலையுடன் நுழையாதீர்.
  • பதட்டமான முகத்துடன் இருக்க வேண்டாம்.
  • பேட்டி காண்போர் இருக்கையில் அமர கூறும்முன் அமராதீர்.
  • இருக்கையின் முனையில் அமர்வதையோ, சாய்வாக அமர்வதையோ தவிர்க்கவும்.
  • கைகளை மேஜை மீது வைக்காதீர்.
  • சீரற்ற முறையில் சான்றிதழ்களை வைப்பதை தவிர்க்கவும்.
  • கேள்வியை திரும்ப கேட்பதை தவிர்க்கவும்.
  • குழப்பமான பதிலை தவிர்க்கவும்.
  • மிகவும் மெதுவாகவோ அல்லது இரைச்சலாக பேசுவதை தவிர்க்கவும்.
  • அவசரத்தில் நிதானம் இழந்து பதில் உரைக்கவேண்டாம்.
  • பதில் சொல்லும்போது எழுந்து நிற்க வேண்டாம்.
  • யூகித்து பதில் சொல்வதை தவிர்க்கவும்.
  • தெரியாத பதிலுக்கு சாக்குபோக்கு மற்றும் காரணங்கள் கூற முயற்சிப்பதை தவிர்க்கவும்.
  • வார்த்தைகளை முழுங்கி பதில் உரைப்பதை தவிர்க்கவும்.
  • விபரங்களை திரித்து கூறுவதை தவிர்க்கவும்.
  • பேட்டியை முடிக்கும் முன்பு இருக்கையை விட்டு எழுந்து வெளியே செல்ல முயற்சிக்க வேண்டாம்.
  • வெளியே செல்லும்போது திரும்பி பார்ப்பதையோ, கதவோரம் நின்று கவனிப்பதையோ தவிர்க்கவும்.
  • பிறரை குறைகூறும் வார்த்தைகளை பேட்டியின் போது தவிர்க்கவும்.
  • பேட்டியாளருடன் விவாதத்தில் இறங்குவதை தவிர்க்கவும்.
  • நல்வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment