தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 13, 2013

கதிர் பிடிக்கும் தருணத்தில் மழை பொய்த்ததால் மக்காச்சோள மகசூல் பாதிப்பு
*********************************************************************************************

கதிர் பிடிக்கும் தருணத்தில் மழை பொய்த்துவிட்டதால் தாளவாடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் வாடுகின்றன. இதனால், அதன் மகசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்..

சத்தியமங்கலம் அடுத்தள்ள தாளவாடி பகுதியில் தொடர் மழை பெய்ததால் அக்டோபர் மாத துவக்கத்தில் அப்பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் விதைத்தனர்.  3 மாதப்பயிரான மக்காச்சோளப் பயிர் ஓரளவு வளர்ந்து கதிர் வெளிவரும்  தருவாயில் போதிய மழை பெய்யாததால் அதன் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டது. 

தலமலை, மல்லன்குழி, கோடிபுரம்,நெய்தாளபுரம், தொட்டபுரம், திகினாரை, நெய்தாளபுரம்,சிக்கள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் இருந்து மாவு, மருந்து  பொருள்கள் தயாரிக்கவும்  கால்நடைகளுக்கு தீவனமாகவும் குறிப்பாக கோழிகளுக்கு முக்கிய தீவனமாகவும் உள்ளது.

கோதுமைக்கு அடுத்தப்படியாக அதிக புரதச்சத்து அடங்கிய தானியப்பயிரான மக்காச்சோளம் ஏக்கர் ஒன்றுக்கு மகசூல் 9 குவிண்டால் வரை கிடைக்கிறது. நடப்பாண்டு மக்காச்சோளம் உற்பத்தி தாளவாடி பகுதியில் 15 ஆயிரம் டன்னாக உயரும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால்,  நவம்பர் மாதத்தில் மழையளவு குறைந்து பனிப்பொழிவு ஏற்பட்டதால் பயிர் வாடத்துவங்கியது. கதிர் வெளிவரும் தருணத்தில் மழையில்லாமல் அதன் உற்பத்தி பாதியாக குறைந்துவிட்டது. 

.இது குறித்து சூசைபுரம் விவசாயி மாதேவப்பா கூறியது: மக்காச்சோளம் வறட்சியை தாங்குவதுடன், குறைவான நீர்பாசனத்தில் வளரக்கூடியது.  பருவமழையை நம்பி அக்டோபர்  மாதம் விதைக்கப்பட்ட பயிர் செழிப்புடன் வளர்ந்து வந்ததால் அதிக மகசூல் கிடைக்கம் என எதிர்பார்த்தோம். ஆனால், பால் பிடிக்கும் தருணத்தில் மழை பொய்த்துவிட்டதால் மகசூல் ஏக்கருக்கு 5 டன்னாக சரிந்துவிட்டது. ஏக்கருக்கு உற்பத்தி செலவு ரூ.10 ஆயிரம் வரை 
ஏற்பட்ட நிலையில் அதன் வருமானம் ஏக்கருக்கு 6 ஆயிரம் கிடைக்கும் என்பதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது என்றார். 

0 comments:

Post a Comment