தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 3, 2013

சாலையோர சிறு வியாபாரத்தைப் பாதுகாக்க வேண்டும் -  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் கோரிக்கை
*********************************************************************************

       
சாலையோர சிறு வியாபாரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற  உத்தரவை அமலாக்க வேண்டும் என்று, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
       இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம், பி.எல்.சுந்தரம் தலைமையிலான ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை கொடுத்த மனு விவரம்:
     "சாலையோர சிறு வியாபாரம், நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கியத் தொழிலாகும். இது, ஏழை மக்களின் தேவைகளை குறைந்த செலவில் பூர்த்தி செய்யும் சேவை. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, சென்னிமலை, கொடுமுடி, அந்தியூர், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், நம்பியூர், சத்தி, பு.புளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாலையோர சிறு வியாபாரிகள் நிலையான இடங்களிலும், தள்ளுவண்டிகள் மூலமாகவும் தொழில் செய்து வருகின்றனர்.
      இந் நிலையில் ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் போலீஸார், பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலைத் துறையால் சாலையோர வியாபாரக் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
     அரசின் கொள்கை மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு இது முரணானது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
2009-ஆம் ஆண்டு சாலையோர சிறு வியாபாரத்திற்கான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 2012-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
      இதுதவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சிறு வியாபாரிகளின் கொள்கை அமலாக்கத்திற்கான 16 வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு மாதத்திற்குள் அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை சாலையோர வியாபாரத்தை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment