தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தால் நடவடிக்கை: சத்தி வட்டாட்சியர் எச்சரிக்கை


சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தி வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம்  தெரிவித்தார்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள சதுமுகைப் பகுதியில் கைத்தறி சேலைகளுக்கு சாயம்போடும் நிறுவனங்கள் பூற்றீசல்போல முளைத்துள்ளதால் அதன் கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் தோட்டங்களில் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அந்த சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆற்றுநீரும் மாசுபடுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சாயத்தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.சாயப்பட்டறைக்கு சதுமுகையில் பலத்த எதிர்ப்பு கிளப்பியுள்ளதால் அவர்கள் சத்தியமங்கலத்தில் சாயப்பட்டறை நிறுவுவதற்கு முன்னேற்பாடுகள் செய்துவதாக கோட்டுவீராம்பாளையம் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து சத்தி வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம் வியாழக்கிழமை கூறியது: சத்தியில் உள்ள சாயப்பட்டறை நிர்வாகிகளை அழைத்துப்பேசி சாயக்கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாயக்கழிவால் பவானிஆற்று நீர் மற்றும் கிணற்று நீர் மாசுபட்டால் சம்பந்தப்பட்ட சாயநிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்

0 comments:

Post a Comment