தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

பவானிசாகர் அருகே குடிநீர் குழாய் பதிப்பு பணி தீவிரம்


பவானிசாகர் அருகே ரூ.70 லட்சம் செலவில்  குடிநீர்திட்ட குழாய்கள் பதிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேசிபாளையம், நல்லூர், மாதம்பாளையம், நொச்சிக்குட்டை, காராப்பாடி, பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, விண்ணப்பள்ளி, தொப்பம்பாளையம், உத்தண்டியூர் மற்றும் புங்கார் ஊராட்சிகளில் உள்ள 116 கிராமங்களுக்கு தொட்டம்பாளையம் கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பகுடுதுறை பவானி ஆற்றில் மின்மோட்டார் மூலம் நீர் எடுக்கப்பட்டு பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி பின்புறமுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரில் உள்ள கிருமிகளை நீக்கி சுகாதாரமான முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டப்பணிகள் 1992 ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1997 ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது. சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டதால் அதிக அழுத்தம் உள்ள இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைப்பட்டு வந்தது. 

தற்போது பவானிசாகர்- புஞ்சைபுளியம்பட்டி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பவானிசாகர் முதல் நால்ரோடு வரை அடிக்கடி குழாய்கள் உடையும் இடத்தில் சிமெண்ட் குழாய்களுக்கு பதிலாக காஸ்டிங் குழாய்களை பதிக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, தற்போது ரூ.70 இலட்சம் செலவில் பகுடுதுறை நீரேற்று நிலையம் முதல் நால்ரோடு வரை 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதிக்கும் பணி துரிதமாக  நடைபெற்று வருகிறது. இதற்கென நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே காஸ்டிங் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவு பெற்றால் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்புகள் தவிர்க்கப்பட்டு கிராம  மக்களுக்கு கோடைகாலங்களில் தங்குதடையின்றி குடிநீர் வழங்க முடியும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment