தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

வனத்தில் 4 நாள்  வாழ்க்கை போராட்டம்: சிகிச்சை பலனின்றி யானைகள் சாவு


பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் மாயாற்றில் சிக்கிய யானைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை பெண்யானைகள் உயிரிந்தன. 


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம் பூதிக்குப்பம் காப்புக்காடு செம்பாறை
வனப்பகுதி, பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள மாயாற்றில் சில தினங்களுக்கு முன் உயிருக்கு போராடிய  பெண்யானையை மீட்டு தீவிர சிசிச்சை அளித்துக்கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு பெண்யானை மாயாற்றில் சிக்கி உயிருக்கு போராடியது.  புலிகள் காப்பக துணை இயக்குனர் கே.ராஜ்குமார்,வனச்சரகர் சிவசுப்பிரமணியம், கோவை வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் அங்கு முகாமிட்டு சேற்றில் சிக்கிய யானைகளை பொக்லைன் மூலம் மீட்டு கரைக்கு கொண்டுவந்து சிகிச்சை அளித்தனர். 

கடந்த 4 தினங்களாக யானைகளுக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை 2 யானைகளும் உயிரிழந்தன. கால்நடை மருத்துவர் மனோகரன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் 12 வயது பெண்யானைக்கு குடற்புழு தாக்கியதால் உயிரிழந்தது தெரிய வந்தது.

15 வயதுள்ள பெண்யானை கர்ப்பம் தரித்துள்ளதும் அதன் வயிற்றில் சுமார் 22 மாத பெண்குட்டியானை இறந்த நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.  யானையின் வயிற்றுப்பகுதி அடிபட்டதால்  குட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக தாய்யானை வலிதாங்காமல் இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.  உயிரிழந்த யானைகள் உணவுகுழாயில் விஷதன்மையுள்ள வேலிமுள்காய்கள் அதிகம் காணப்பட்டதால் அதன் காரணமாக அவை இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர், யானைகள் சடலங்கள் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment