தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

உயிருக்கு போராடிய யானையை மீட்க வந்த மற்றொரு பெண்யானையும் 
சேற்றில் சிக்கியது

யானைகளை மீட்க வனத்துறை தீவிர நடவடிக்கை



 
மாயாற்றுப் படுகையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்யானையைமீட்க வந்த மற்றொரு பெண் யானையும் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அதனை மீட்கும் நடவடிக்கையில் வன்த்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். 


பவானசாகர் புலிகள் காப்பகம் பூதிக்குப்பம் காப்புக்காடு தென்பாறை மாயாற்றுப் படுகையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 12 வயதுள்ள  பெண்யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் பிரதீப் மற்றும் தமிழரசி ஆகியோர் யானைக்கு குளோகோஸ் செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மாயாற்றுப்படுகைக்கு வந்த யானைகள்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்யானை அருகே வந்தன. அவை படுத்துக்கிடக்கும் யானையை துப்பிக்கையால் தூக்கி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டன.  

அப்போது, அதில் இருந்த 10 வயதுள்ள பெண்யானை திடீரென அதே இடத்தில் மயக்கி விழுந்தது. அப்போது,அதன் பின்னங்கால் சேற்றில் சிக்கிக்கொண்டது. இரு யானைகளையும் காப்பாற்றும் முயற்சியில் பிற யானைகள் ஈடுபட்டன. இருப்பினும், மிகவும் பலவீனமாக கிடந்த யானைகளை மீட்க முடியாததால் அவை மீண்டும் காட்டுக்குள் சென்றன.

சேறும் சகதியுமாக உள்ள மாயாற்றுப்படுகையில்  100 அடி தூரத்தில் அடுத்தடுத்து  சிக்கிக் கிடக்கும் பெண் யானைகளை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் சிக்கிக்கொண்ட யானைகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதால் அவற்றை கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட பெண்யானை கால்களை கயிறு மூலம் கட்டி ஜேசிபி மூலம் தூக்கி மெல்ல மெல்ல கரையில் சேர்த்தனர். யானைகள் கரைக்கு கொண்டுவரப்பட்டதும் அவற்றின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் திரவ உணவுகளை காது வழியாக செலுத்தி வருகின்றனர்.

பவானசாகர் வனத்தில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுவதால் யானைகளுக்கு போதிய தீவனம் மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அவை குடிநீர் தேடி பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதிக்கு படையெடுக்கின்றன. மாயாற்று படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் சேறும் சகதியும் நிறைந்திருப்பதால் நோய்வாய்ப்பட்டுள்ள யானைகள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. கோடைகாலத்தில் யானைகள் நோய்தாக்குதலுக்கு உள்ளாவதால் அதன் உடல்நிலை பலவீனம் அடைந்து மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றன என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment