தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

மேட்டுப்பாளையத்தில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி.
52 வயதில் பிளாக் பெல்ட் பெற்ற முன்னாள் மாணவர்..
 


மேட்டுப்பாளையம் கராத்தே மாஸ்டர் பி.எம்.வேலுவின் கொஷின்காய் கராத்தே பள்ளியின் 29 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது..அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நேற்று காலை துவங்கியது.மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு காரமடை எஸ்.எம்.டி.குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். டி.ஆர்.எஸ்.பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சண்முக சுந்தரம் கராத்தே போட்டிகளை துவக்கி வைத்தார்..மாஸ்டர் வேலு வரவேற்று பேசினார். விஜயலட்சுமி சண்முக சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்..போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 500 கராத்தே மாணவ ,மாணவிகள் பங்கேற்றனர்..மாலை நடைபெற்ற  பரிசளிப்பு விழாவிற்கு டி.ஆர்.எஸ். பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ,தலைமை தாங்கினார்..மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார்,காரமடை எம்.கே.கே.விஜயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்..கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனரும்,தொழிலதிபருமான ஓ.ஆறுமுகசாமி கௌரவ விருந்தினர்காக கலந்துகொண்டு இறுதிப்போட்டியை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்..கராத்தே வீரரும் திரைப்பட நடிகருமான சுமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.விழாவில் ,உலக சமுதாய சேவா சங்க கோவை மண்டல துணைத்தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி, முன்னாள் எம்.எல்.ஏ,.மகேஸ்வரி ,எம்.எ,ராமசாம, டாக்டர் மகேஸ்வரன், வி.கே.வி.சுந்தரராஜ்,ஆர்.வி.சி.நடராஜ்,கே.என்.எல்.ஓ.துரைசாமி,. ஈ.ரகுபதி, தாயனூர் முத்துசாமி,காரமடை சின்னத்துரை,ஜனார்தனன்,மருதூர் ஊராட்சி தலைவர் அறிவு ரங்கராஜ்,சிக்கதாசம் பாளையம் ஊராட்சி தலைவர் சி.ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் 52 வயது முன்னாள் மாணவர் டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் கராத்தே பிளாக் பெல்ட் பெற்றார்..

0 comments:

Post a Comment